யாழ். ஐந்து சந்திப்பகுதியில் மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை!

Loading… யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் இன்று மாலை (10-04-2018) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும் மாவா போதைப் பொருளை வாங்குவதற்கு வந்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர். அங்கிருந்து பெருமளவு மாவா போதைப் பொருள் பொட்டலங்களும் மாவா போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. … Continue reading யாழ். ஐந்து சந்திப்பகுதியில் மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை!